லவ்வுதே மனசு

0
858

லவ்வுதே மனசு’ன்னு காதலப்பத்தி எழுதுன பதிவுக்கு, காதல்லாம் சுத்த ஹம்பக்குன்னு காதலால
பாதிக்கப்பட்டும்,பாதிக்கப்படாமலும் சிலரு கருத்து சொன்னாங்க, மோடி மாதிரி. காதலப்பத்தி இன்னும் எத்தனக் காலம்வேணாலும், யாருவேணாலும் பேசலாம் சலாம் லாம் ம். காதலைக் கொண்டாடியதில் தமிழ் சினிமாவின் பங்கு கடலைப் போன்றது. அதில் இசையமைப்பாளர்களின் பங்கும், கவிஞர்களின் பங்கும், பாட்டுக் குயில்களின் பங்கும் எல்லையில்லாத உயரத்தைத் தொட்டது. குறிப்பாக கவியரசர் கண்ணதாசன், வாலி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா,வைரமுத்து’ன்னு சொல்லிக்கினே போகலாம். அவங்கவங்களோட காதல் நினைவுகள பாட்டோடு கிளறி விடுற கரண்டிதான் இந்த லவ்வுதே மனசு. வேற எந்த புனித பொடலங்காவும், அற அருவாமனையும், விழுமிய வெண்டக்காவுமில்ல. இது மோடியோட டிஜிட்டெல்லு இந்தியா மேல சத்தியம் சத்தியம்.

”கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே..
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே..”

”மனசு தடுமாறும் அது
நெனைச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு
தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் ஒன்
நெனப்பு நெஞ்சுக்குழி காயும்”
கடலோரக் கவிதைகள் படத்துல வந்த பாட்டு. பாரதிராசா,இளையராசா கூட்டணின்னா சொல்லணும்மா இன்னா..?

அடிச்சி பின்னி இருப்பாங்க. அதுவும் ஜானகி,ஜெயசந்திரக் குயில்களின் கொரலு இருக்குதே…ஒண்ணாம் தேதி சம்பளத்தவிட ஒசத்தியானது. கொடுக்கவா.. தடுக்கவான்னு தவிக்கிற தவிப்புதான் ரெண்டு மனசுக்குமான ஒரே துடிப்பு.

மனசுக்குள்ள நுழைஞ்சிட்ட இன்னொரு மனசத் தூங்க வைக்கிறது இருக்குதே.. அத விடபெரிய வேல ஒலகத்துல வேற எதுவும் கெடையாதுங்க. நெஜமாத்தான் சொல்லுறன் எண்ணங்கள எப்படி தூங்க வைக்க முடியும். நீங்க வாதம் பண்ணி தூங்க வைக்கலாம்ன்னு சொன்னாலும்.. தூக்கத்துலயும் அவன்தான், அவள்தான். அந்த ஒலகத்துல இரவும் கெடையாது. பகலும் கிடையாது. எல்லாமே காதல்தான்,கனவுதான். உணவுக்கூட அந்த நெனப்புதான்.
இன்னும் பேசலாம்…லவ்ஸ்ஸு தொடரும்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்