லவ்வுதே மனசு: பூபதி

0
743

இந்த சமூகத்துக்கு மிக முக்கியமான ஒரு கட்டுரை.

“சைட்”
இதை கடந்து வரமால் இளமை பருவத்தை கடந்து இருப்பது ரொம்ப கஷ்டம், ஒவ்வோரு மனிதருக்கும் தனது எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு கண்டிப்பாக வந்து விடும். சிலர் அதை காதலாக மாற்றி அடுத்த நிலையை அடைந்து விடுவார்கள் சிலர் மட்டும் ஈரப்பை மட்டும் இருந்து ரசித்து விட்டு கடந்து சென்று விடுவார்கள்.
சைட் என்றால் ரசிப்பு தான். பிறரால் நாம் ரசிக்கப்படுகிறோம் என எண்ணும் போதே மனதுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கும் காதலை விட இது உயரிய நிலை. (சிரிக்கப்பிடாது)

சைட் பத்தி சில.
சைட் அடிக்க தகுந்த இடங்கள் :
கோயில், பேருந்து நிலையம், திருமண நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், சாவு வீட்டில் கூட சைட் அடிப்பாங்க நம்ம ஆட்கள்.
சைட் அடிக்க பெரும்பாலும் நேரங்கள் குறைவாக தான் இருக்கும். காதலை போல் பல மணி நேரம் அமர்ந்து ரசிக்க எல்லாம் நேரம் இருப்பது இல்லை இதற்கு. சைட் எப்படி அடிக்கனும், எப்படி அடிக்க கூடாது, சைட் அடிப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது, போன்ற மிக முக்கியமான விஷயங்கள். (நோட் பண்ணிக்கோங்க)

சைட் எப்படி அடிக்க வேண்டும் :
10 பேர் கூட்டத்தில் இருந்தாலும் மனதுக்கு பிடித்தமான பெண்ணை மட்டும் சைட் அடிக்க முடியும் முதலில் அவர்களது பார்வை உங்கள் பக்கம் திருப்ப சில கோமாளி வேலையை பார்க்க வேண்டும். அந்த கோமாளி வேலை ஒவர் டோஸ் ஆகமால் பார்த்து கொள்வது நலம். அந்த பெண் நிற்கும் இடத்தில் நீங்கள் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும். பார்வை உங்கள் பக்கம் திருப்ப ஜோக் கலாய்த்து கொண்டு இருப்பது நலம்.
(சில பெண்களுக்கு ஆடை பிடித்த கலரில் இருந்தாலே ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள்) என்ன செய்தாலும் பார்வை அங்கு திருப்பமால் ஒரக்கண்ணால் மட்டும் பார்த்து வேலை செய்யுங்கள். சரியான கிளிக் ஆகும் நேர்த்தில் உங்கள் பார்வை சரியாக அவர்கள் பக்கம் திருப்புங்கள். கிளிக் ஆகும் திரும்பும் போது எக்காரணம் கொண்டும் “ஈஈஈஈ” என இளிச்சிராதிங்க, அது உங்க மண்டை மேல கோமாளி தொப்பியை மாட்டிவிடும், பார்வை திரும்புன 3 நிமிடத்தில் பேஸ்புக் ஐடியையும் வாட்ஸ்அப் நம்பரையும் கேட்கமால் இருங்க. உங்கள் செய்கையை பார்த்து அந்த பெண்ணே கடைசியில் தந்து விட்டு சொல்லும். அதுக்கு “உங்க பெர்பமான்ஸ் ரொம்ப முக்கியம் ஒரவுகளே”. பெரும்பாலும் சட்டை நீலம் அல்லது வெள்ளை பயன்படுத்துங்கள், பொது நிகழ்ச்சிக்களுக்கு உங்களுக்கு அது பெரிய ப்ளஸ் ஆக முடியும். சிரிப்பு, நேர்த்தியான தலை வாரல் இதுவும் உங்களை மெருகு ஏற்றும்.

சைட் அடிக்கும் போது செய்ய கூடாத விஷயம் :
ரவுடியிசம் காட்ட வேண்டாம், சினிமாவில் மட்டும் தான் பெண்களுக்கு ரவுடியை பிடிக்கும் நிஜத்தில் அல்ல, புகை பிடித்தால், கெட்டவார்த்தை பேசுதல், முஞ்சை உர்ர்ர், என வைத்து இருப்பது இது எல்லாம் பண்ணா யாரும் பார்க்க மாட்டாங்க, முடிந்த வரை பொது இடங்களில் இதை தவிர்க்க பாருங்கள்.

சைட் அடிக்கிறவனை கண்டுபிடிப்பது எப்படி :
இடத்துக்கு சம்மந்தம் இல்லமால் எதாவது பண்ணிட்டு இருப்பான், மொக்க ஜோக் சொன்னாலும் சிரிப்பான், ஆரவாரம் நடந்து கொண்டும் இடத்தில் தனக்கு சம்மந்தமே இல்லாத மாதிரி இருப்பான் அப்படின்ன பயபுள்ள சைட் அடிக்குன்னு அர்த்தம்.
‘பாட்டு கேட்பது. புத்தகம் படிப்பது போல் தான் சைட்டும்’ பரவச நிலை எதிர்பாலிணத்தின் பார்வை பட்ட உடனே கிடைத்து விடும் அதனால் சைட் அடிப்போம் சந்தோஷமாக இருப்போம்…
மீதியை அடுத்த கட்டுரையில் பார்க்காலம் ஒரவுகளே.

-பூபதி கலைவாணன்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்