லதா ரஜினிகாந்தின் கடையை காவல்துறை உதவியுடன் காலி செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
504

லதா ரஜினிகாந்த் மாநகராட்சி அறிவித்துள்ள வாடகையை செலுத்தாவிடில் அவரது கடையை காவல்துறையின் உதவியுடன் மாநகராட்சி காலி செய்யலாம் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் ஒருபக்கம் நீதி நேர்மை ஊழலற்ற ஆட்சி சிஸ்டம் சரியில்லை போர் வியூகம் என்று விடாமல் முழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது வீட்டிலேயே அவர் பேச்சுக்கு எதிரான செயல்கள் வெளிப்படையாகவே நடக்கின்றன.

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் ஆசிரமம் கல்வி நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ஆசிரியர்களுக்கு சரியாக சம்பளம் தராதது, வாடகைக்கு எடுத்த கட்டடத்துக்கு பல லட்சங்கள் கட்டண பாக்கி வைத்தது என்று பல முறைகேடுகள். இப்போது மாநகராட்சியுடன் மல்லுக்கட்டுகிறார்.

சென்னையின் பிரதான பகுதியான ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடையில் கடந்த 25 வருடங்களாக டிராவல் எக்சேஞ்ச் இந்தியா என்ற நிறுவனத்தை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். அந்த இடத்தில் கழிப்பறை சைஸ் கட்டடத்துக்கே பதினைந்தாயிரம் வாடகை தர வேண்டும். ஆனால் லதா ரஜினிகாந்த் கொடுத்து வந்தது வெறும் மூவாயிரத்து எழுநூற்று இரண்டு ரூபாய். நம்புங்கள் முப்பதாயிரம் அல்ல மூவாயிரத்து சொச்சம்.

மாநகராட்சி சட்டென்று விழித்து இந்த வாடகையை 21,160 ரூபாயாக உயர்த்தியது. இதுவும்கூட அந்தப் பகுதியில் உள்ள தனியார் கடைகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு. ஆனால், லதா ரஜினிகாந்த் இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த லதா ரஜினிகாந்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பல வருடங்களாக அந்த கடையை பயன்படுத்தி வருவதால், மாநகராட்சியின் புதிய வாடகைக்கு தொடருவதா வேண்டாமா என்பதை லதா ரஜினிகாந்த் முடிவு செய்து கொள்ளலாம். அவர் அதற்கு உடன்படவில்லையெனில் கடையை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி காலி செய்து பொது ஏலத்துக்கு விடலாம் என்று நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

ஐம்பதாயிரம் பெறுமானமுள்ள கடையை ஒரு ஏழைக்கு மூவாயிரம் ரூபாய்க்கு தர இந்த மாநகராட்சிக்கு மனமில்லை… ஐயோ சிஸ்டம் கெட்டுப் போச்சி… போர்… போர்…

இதையும் படியுங்கள் : அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிதி, சகோதரருக்கு அரசுப் பணி; முதல்வர் வழங்கினார்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்