வங்கி சாராத நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (ஐபிஹெச்எஃப்), நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் ஆகியவற்றின் இணைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்துவிட்டது.

இவ்விரு நிறுவனங்களும் இணையவதற்கு கடந்த ஏப்ரலில் முடிவு செய்தன. அதற்கான அனுமதியை கோரி, ரிசர்வ் வங்கியிடம் கடந்த மே மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் – லஷ்மி விலாஸ் வங்கி இணைப்புக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை என்ற தகவலை இரு நிறுவனங்களும் புதன்கிழமை மாலை வெளியிட்டன. 

பங்குச்சந்தைகளுக்கு அந்த நிறுவனங்கள் அளித்த அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, வாராக்கடன் அதிகரிப்பு, மூலதனம் பற்றாக்குறை ஆகியவை காரணமாக, உடனடி சீரமைப்பு நடவடிக்கையின்கீழ் லஷ்மி வங்கியை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here