ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

0
229

பொதுத்துறை நிறுவனங்களுக்கு இயந்திர உதிரிபாகங்கள் வழங்குவதற்காக லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாரியம், கெயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்க கடந்த 2007 – 2011ம் ஆண்டு காலகட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான உதிரி பாகங்கள் வாங்குவதற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் மூலம் 77 கோடி ரூபாயை இங்கிலாந்தைச் சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சிபிஐ அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் உலகில் மிகப் பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.