(ஏப்ரல் 28,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

முகநூலில் தன்னை அ.இ.அ.தி.மு.க ஆதரவாளராகப் பிரகடனப்படுத்தியுள்ளவர் ப்ரியா குருநாதன். இவர் புதன் கிழமையன்று தன் வீட்டுக்கு வந்த விருந்தினரின் மனம் புண்படும்படியான பதிவு ஒன்றை இட்டிருக்கிறார். திருவள்ளுவர் சொன்னது இது: அனிச்சம் பூவை மோந்து பார்த்தால் வாடிவிடும்; முகத்தில் கனிவில்லாமல் பார்த்தாலே விருந்தினர் வருத்தமடைவார்கள். ப்ரியா தனது விருந்தினரின் மனதறிந்து பேசியிருக்க வேண்டும். அவர் சொன்ன மற்ற விஷயங்கள் யதார்த்தமானவை. முகநூலில் தி.மு.க ஆதரவாளராக தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள யுவ கிருஷ்ணா, இதனை தன் பக்கத்தில் பதிவேற்றினார். இதைத் தொடர்ந்து முகநூல், ட்விட்டரில் ப்ரியா குருநாதனின் ”பணக்கார பகுமானத்தைக்” கலாய்க்கத் தொடங்கினார்கள்.

priyagurunathanpost

yuvakrishna

nanthan
இணைய நெடுஞ்சாலையின் பிரதான தெரு முகநூல் என்றால், ட்விட்டர் அதன் முதல் குறுக்குச் சந்து; ஆன்லைனில் பெண்கள் வதைக்கப்படுகிறார்கள் என்பது உலகம் முழுவதும் உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் ப்ரியா குருநாதன் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டும்; வடக்கில் என்டி டிவி செய்தியாளர் பர்கா தத் தனக்கு நேர்ந்த பால்ய காலத்து செக்ஸ் கொடுமையைப் பற்றிப் பேசியபோது சமூக வலைத்தளங்களில் கடுமையான தாக்குதல்களுக்குள்ளானார்; இணையத் தெருக்களில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களைச் சொல்லும் யாரும் வதைக்கப்படுகிறார்கள்; பெண்கள் குறிப்பாக இந்தத் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகிறார்கள்.

“நான் ஆதிக்கச் சாதி; ஆணவக்கொலைகளைக் கண்டிக்கிறேன்” என்று இப்போது டாட் காமில் பேசிய பெண்கள் வதைக்கப்பட்டார்கள்; கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள். சிலர் தாங்கள் கூறியதைப் பின்வாங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். ப்ரியா குருநாதன் தன் மீதான நிந்தனைகளை தைரியமாகவும் நகைச்சுவை உணர்வுடனும் எதிர்கொண்டார். தலித் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான மீனா கந்தசாமி சமூக வலைத்தளங்களில் பல முறை இந்து வலதுசாரிகளால் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியிருக்கிறார். இந்த அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளிவிட்டு உதாசீனப்படுத்திவிட்டு ஒவ்வொரு நாளையும் புது நாளாக, புதிய வாய்ப்பாக அணுகுவதில்தான் இணைய உலகின் தெருக்கள் பெண்களின் வசமாகும்.

பெண் விரோதக் களமாகும் ட்விட்டர்