ஜியோமியின் துணை பிராண்ட் ரெட்மீ தனது ரெட்மீ கோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் அண்ட்ராய்டு கோ தளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ரெட்மீ கோ ஸ்மார்ட்போன் 5 இஞ்சு ஹெச்டி ஸ்கீரினுடன் அறியப்படாத குவால்கோம் ஸ்னாப் டிராகன் ப்ராஸசரில் இயங்குகிறது என்பது மட்டுமே தற்போது வெளிவந்த தகவல்களின் மூலம் தெரிகிறது. மேலும் ஸ்னாப் டிராகன் 425 SoC-யாக இருக்கலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 8.1 ஓரியோ, மற்றும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியுடன் வரவிருக்கும் ரெட்மீயின் விலை ரூ.6,500க்கு நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மீ கோ ஸ்மார்ட்போனில் 3000mAh அளவு பேட்டரி பவரும், 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் உள்ளது.

வெளியிடப்படும் நாடுகளின் விபரங்களோ, அதன் விலைப்பட்டியலோ, வெளியாகும் தேதியோ இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here