ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ்: பட்ஜெட் விலையில் 4K டிவி

The Redmi Smart TV X series brings a couple of premium features at an affordable price. All models offer a screen-to-body-ratio of 97 per cent.

0
482

ரெட்மி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் என்று அழைக்கப்படும் புதிய டிவி மாடல்களை அதன் புதிய ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்தது.

இந்த புதிய ஸ்மார்ட் டிவி சீரீஸின் கீழ் 65 இன்ச், 55 இன்ச் மற்றும் 50 இன்ச் என்கிற மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

EY3-M8ik-Xk-AEy8-CY

ரெட்மியின் இந்த சமீபத்திய ஸ்மார்ட் டிவி தொடர் ஆனது 4 கே டிஸ்ப்ளே மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் வருகிறது. மேலும் இது MEMC தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது, இது வியூயிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் தொடரில் நான்கு 12.5W பிரதான ஸ்பீக்கர்கள் மற்றும் நான்கு டிவீட்டர்கள் உட்பட மொத்தம் எட்டு ஸ்பீக்கர்கள் உள்ளனர். இது டால்பி ஆடியோ மற்றும் சரவுண்ட் சவுண்ட் வசதியும் கொண்டுள்ளது. இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் XiaoAI assistant உடன் வருகிறது. இது தொலைதூர குரல் அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது மற்றும் ஒருவர் மற்ற IoT சாதனங்களைக் கட்டுப்படுத்த இதிலுள்ள அசிஸ்டென்ட்டை பயன்படுத்தலாம்.

பெஸல்லெஸ் வடிவமைப்பில் வெளி வரும் இந்த ஸ்மார்ட் டிவிகளில், க்வாட் கோர் கோர்டெக்ஸ் ஏ 73 ப்ராசஸர் மற்றும் 2 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் ஜியோமியின் பேட்ச்வால் கொன்டு இயங்குகிறது, மேலும் இது ஆண்ட்ராய்டு டிவியையும் ஆதரிக்கிறது.

விலையைப் பொறுத்தவரை, 65 இன்ச் மாடல் டிவி இந்திய மதிப்பின்படி ரூ.34,987 க்கும் மற்றும் 55 இன்ச் மாடலானது இந்திய மதிப்பின்படி ரூ.24,382 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் 50 இன்ச் டிவி மாடலின் விலையை ஜியோமி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, இருப்பினும், இதன் விலை ரூ.21,000 க்குள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here