இந்தியாவில் இப்போது ரெட்மி 6ஏ-ன் விலை ரூ.6,599.

சியோமி இந்தியா சனிக்கிழமையன்று அதன் முன்னணி குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது. அதில், ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6-ன் விலை ரூ.8,725. குறிப்பிட்ட டிவிகள் மற்றும் பவர்பேங்க் மாடல்கள் அடங்கும். சியோமி தனது டிவிட்டர் பக்கத்தில் விலை உயர்வு குறித்த பதிவில், உள்ளீடு செலவுகளில் கணிசமான உயர்வு இருப்பதால் போன்களின் விலையை உயர்த்துவது அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 6ஏ (2ஜிபி/16ஜிபி) அறிமுகப்படுத்தப்பட்ட போது ரூ.5,999 ஆக இருந்தது. இப்போது ரூ.600 அதிகரித்து ரூ.6,599 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 6ஏ 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட போன் ரூ.500 அதிகரித்து தற்போது ரூ.7,499 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி 6ஏ-ஐ சியோமி இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோதே இந்தியா ரூபாய் தொடர்ந்து சரிவை சந்தித்தால், ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் திருத்தப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. ரெட்மியின் பிற சாதனங்களில் விலை அதிகரித்திருப்பது எம்.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம்.

ரெட்மி 6 அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ரூ.7,999 தற்போது ரூ.500 அதிகரித்து ரூ.8,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 6 3ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலையான ரூ. 9,499ல் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்.ஐ எல்.இ.டி டிவியின் விலையும் அதிகரித்துள்ளது. எம்.ஐ எல்.இ.டி டிவி 4சி ப்ரோ 32 மற்றும் எம்.ஐ எல்.இ.டி 4ஏ ப்ரோவின் விலை ரூ. 15,999 மற்றும் ரூ.31,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை முறையே ரூ. 1000 மற்றும் ரூ.2000 அதிகரித்துள்ளது.
இறுதியாக, 10000 mAh எம்.ஐ பவர் பேங்க் 2ஐ விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போது ரூ.100 அதிகரித்து ரூ.899 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு வரும் நவம். 11ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று ரெட்மி நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here