ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி: வெளியீட்டு விவரம்

Redmi Note 9 Pro 5G may run Android 10, as per the Geekbench listing.

0
60

நவம்பர் 26 ஆம் தேதி சீன சந்தையில் ஜியோமி நிறுவனம் தனது ரெட்மி 9 5ஜி மற்றும் நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் மாடல்கள் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி நோட் 9 5ஜி மாடலில் 6.53 இன்ச் FHD+ பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு அல்லது டிமென்சிட்டி 720 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா சேர்த்து மூன்று கேமரா லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

தற்போது ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

இதன்படி ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அட்ரினோ 619 ஜிபியு, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 645 புள்ளிகளையும், மல்டி கோரில் 1963 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

EmtRrY5WEAA7bOB En-B5cv-OW4-AAWl81

இதுதவிர ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் 6.67 இன்ச் பன்ச் ஹோல் எல்சிடி பேனல் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரைமரி கேமரா, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here