ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 48 எம்.பி. கேமரா கொண்ட புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ரெட்மி பை ஜியோமி என்ற புதிய பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உண்டு. ஹைப்ரிட் டூயல் சிம் வசதியுடன் வரும் இது ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளத்துடன் வருகிறது.

புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார் f/1.8, 5 மெகா பிக்சல் இரண்டாவது பிரைமரி கேமரா ஏ.ஐ அம்சங்களுடனும், 13 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும்.

மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. க்விக் சார்ஜ் 4 வசதியுடன் 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி. மெமரி மாடல் விலை 999 யுவான் (ரூ.10,390), 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1199 யுவான் (ரூ.12,460), 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 1399 யுவான் (ரூ.14,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here