ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் அறிமுகம்

ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1.75 எம்எம் அளவு மெல்லிய பெசல்கள் உள்ளன.

Redmi Note 11 5G vs Redmi Note 11 Pro vs Redmi Note 11 Pro+: Price and  Specifications Compared | NDTV Gadgets 360

இதன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளேவில் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் மீடியாடெக் டிமென்சிட்டி 920 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் பெற்று இருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், லிக்விட் வி.சி. கூலிங் உள்ளது.

புதிய நோட் 11 ப்ரோ சீரிசில் உலகின் முதல் ஹாலோகிராபிக் சஸ்பென்ஷன் உற்பத்தி முறை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், என்.எப்.சி. உள்ளது. ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல்களில் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெலிமேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ மாடல் 5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டிருக்கிறது.

விலை விவரங்கள்

ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன், டைம்லெஸ் பர்பில் மற்றும் மில்கி வே புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 250 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18,710, 8 ஜிபி + 128 ஜிபி விலை 296 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 22,245 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி விலை 328 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 24,572 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் மாடல் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன் மற்றும் டைம்லெஸ் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை 296 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 22,245, 8 ஜிபி + 128 ஜிபி விலை 328 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24,572, 8 ஜிபி + 256 ஜிபி 359 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 26,915 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here