ரெட்மியின் 98 இன்ச் 4K டி.வி.

.Xiaomi’s sub-brand Redmi has launched the Redmi Smart TV Max in China. .The TV runs on Xiaomi’s PatchWall UI. .There is no information whether the TV is coming to India.

0
224

ஜியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மியின் மிகப்பெரும் டி.வி. மாடலாக வெளியாகி இருக்கும் ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் 98 இன்ச் அளவில் உருவாகி இருக்கிறது. 

26ad272fb8f7a47da5065be10e4b63cbd5d1224f

புதிய ஸ்மார்ட் டி.வி.யில் 98 இன்ச் 4K ஸ்கிரீன் ஹெச்.டி.ஆர். வசதி, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் MEMC மோஷன் கம்பென்சேஷன் தொழில்நுட்பம், அம்லாஜிக் 12 நானோமீட்டர் டி972 சிப்செட் கொண்டிருக்கிறது. பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

1-5-1130x636

இத்துடன் ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. மேலும் டால்பி + டி.டி.எஸ்., 4 யூனிட் பெரிய கேவிட்டி ஸ்பீக்கர் வழங்கப்பட்டிருக்கிறது.

3-3

ரெட்மி ஸ்மார்ட் டி.வி. மேக்ஸ் 98 இன்ச் மாடல் விலை 19999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,15,390) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here