வெறும் 13000 கோடி ரூபாயை கைப்பற்றுவதற்காக தான் மத்திய அரசு , நாட்டை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறை படுத்தியதா?என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கறுப்புப் பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.10,720 கோடி தவிர மீதி தொகை வங்கிக்கு வந்து விட்டது. அப்படியானால் வெறும் ரூ13000 கோடியை கைபற்றத்தான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இதற்காக நாடு மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர உயிரிழந்துள்ளனர். தினசரி கூலி பெறும் 15 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் முடங்கின. லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதற்காக தான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா. 13 ஆயிரம் கோடி ரூபாய் சிக்கியதாக கூறும் நிலையில் அதுவும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் தற்போது இருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டு இருக்கலாம்.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் குறைந்துள்ளது. அதுவே வருடத்துக்கு ரூ2.25 லட்சம் கோடி இழப்பு ஆகும் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக டெல்லியில் இந்திய தேசிய மாணவர் சங்கம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய ப சிதம்பரம் உலகளவில் ஒரே ஒரு பொருளாதார வல்லுநராவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என்று கூறினார்களா? என்று கேட்டிருந்தார். ஒருவர் கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்லது என்று கூறவில்லை. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த அன்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கேரளாவில் இருந்தார். அவர் அன்று டெல்லியில் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பற்றி தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனை பெறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பற்றி தலைமை பொருளாதார ஆலோசகருக்கு தெரியாது . அவருக்கே தெரியாது என்றால் என்னவிதமான பொருளாதாரம் இது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

( இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here