கடந்த 2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில், ரூ. 750 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக நோட்டுகளை மாற்றியது அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கிதான் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் ” வாழ்த்துகள் அமித் ஷா ஜி, நீங்கள் இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்திருக்கின்றனார். நீங்கள் இருக்கும் வங்கிதான் ரூ.750 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை 5 நாட்களில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி முதல் பரிசு பெற்றுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சிதறி மோசமான நிலையில், இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த உங்களுக்கு எனது சல்யூட் என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்