ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டியதில்லை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 22வது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி வரியில் இருந்து ஆறு மாதம் விலக்கு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் வணிகம் புரிபவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை சமரர்ப்பிக்க வேண்டியதில்லை என்றும், முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: MoneyControl

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்