ரூ.48,000 கோடியில் தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

The government said the 73 Tejas LCA fighter aircraft would become "a potent platform to meet the operational requirements of the Indian Air Force"

0
55

இந்திய விமான படைக்கு வலுசேர்க்க 83 தேஜஸ் போர் விமானங்களை சுமார் 48000 கோடி ரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாம். அதிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த விமானங்கள் டெலிவரியாகும் எனவும் தெரிகிறது. 

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று(புதன்கிழமை) கூடியது. இந்தக் கூட்டத்தில் 73 தேஜாஸ் எல்.சி.ஏ போர் விமானங்கள் மற்றும் 10 பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

“சுயசார்பு இந்தியாதிட்டத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தின் வெளிப்பாடு இது” எனவும் இந்த ஒப்பந்தம் இந்திய பாதுகாப்புத் துறைஉற்பத்தியில் முக்கியத் திருப்பமாக இருக்கும். மேலும் தற்போதைய எல்.சி.ஏசுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக விரிவுபடுத்துவதோடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் என்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

இந்த போர் விமானங்கள் அனைத்தும் மார்க் 1A ரக விமானங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் உள்ள இலக்குகளை அடைவது, ஆகாயத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்வது, எதிரிகளின் ரேடாரை முடக்குவது மாதிரியான வசதிகள் இதில் உள்ளன. தொடர்ந்து மார்க் 2 ரக விமானங்களை வாங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here