நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையிலும் தகுந்த பாதுகாப்புகளுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

லோக் சபாவில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துபூர்வ பதிலளித்தார். அதன்படி 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது எதுவும் நிறுத்தப்படாமல் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சில ரூபாய் நோட்டுக்கள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்த பின்னரே அச்சிடப்படும்.

———
———–

2020, மார்ச் இறுதி வரை இந்தியாவில் மொத்தமாக ரூ.  273.98 கோடி புழக்கத்தில் இருந்து வந்தது.கொரோனா காரணமாக தற்காலிகமாக ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருந்தது. மறுபடியும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி படிப்படியாக ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணி தொடங்கும். 

மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் மே 4 முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here