ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு: புதிய சிக்கலில் சந்திரபாபு நாயுடு

The income tax department has come up with a startling revelation that more than Rs 2,000 crore unaccounted income was unearthed during raids at 40 places across four states including Andhra Pradesh,

0
108

வருமான வரித்துறை ஆந்திரா மற்றும்தெலுங்கானாவில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2000 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்.,6 ஆம் தேதி முதல் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 6 நகரங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கியவரும், முன்னாள் உதவியாளருமான ஸ்ரீநிவாசராவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த முக்கிய உள்கட்டமைப்பு ஒப்பந்த பணிகள் சட்ட விரோதமாக போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 25 க்கும் அதிகமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநிவாசராவ் வீட்டில் இருந்து மட்டும் ரூ.85 லட்சம் மதிப்பிலான பணம், ரூ.71 லட்சம் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது ஊழல் நடந்ததாக ஆளும் ஒய்எஸ்ஆர்., காங்., குற்றம்சாட்டி இருப்பதை சந்திரபாபு நாயுடு மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது உதவியாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here