மூன்றில் ஒரு இந்தியர் ரூ.10,000 – ரூ.15,000 விலையில் அடுத்த மொபைல் வாங்க திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த விலையில் பொரும்பாலான மக்கள் அதிகம் விரும்பும் பிராண்ட் ஜியோமியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டர் பாய்ண்ட் தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய உலகளாவிய ஆய்வில் ‘கன்ஸ்யூமர் லென்ஸ்’ கூறியதாவது, இந்தியாவில் இரண்டில் ஒருவர் நடுத்தர அல்லது உயர் ரக மொபைல் வாங்க திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர். ஐந்தில் நான்கு பேர் தாங்கள் வைத்துள்ள ஸ்மார்ட்போனே போதுமானது என என்னுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் அதிநவீனத்துடன் இருந்து வருகின்றனர். பெரும்பாலானோர் தங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது ஸ்மார்ட்போன்களை உபயோகித்து வருகின்றனர். நடுத்தர பிரிவுகளில் நாம் பயன்படுத்தி வரும் மாடலை விட கூடுதல் சிறப்பம்சம் கொண்ட மொபைல்கள் வெளிவருகின்றன, பயனாளிகள் இந்த சிறப்பம்சங்கள் மேம்படுத்த போதுமானதாக என்னுகின்றனர் என கன்ஸ்யூமர் லென்ஸ், மூத்த ஆய்வாளர் பாவல் நையா கூறினார்.

2018ஆம் ஆண்டின் பிரதான முக்கிய அம்சங்கள் சிலவற்றிற்கு, ஆறு மாதங்களுக்கும் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவே மூன்றில் ஒருவர் ரூ.10,000 – ரூ.15,000 வரை தங்களது அடுத்த ஸ்மார்ட்போன்களுக்கு செலவு செய்ய தயாராவதற்கு முக்கிய காரணம் என நையா கூறியுள்ளார்.

பிரீமியம் அனுபவங்களை மலிவு விலையில் தேடும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் ரூ.25,000 முதல் ரூ.40,000 பிரிவில் வேகமாக வளரும் ஒன்பிளஸ் பிராண்டையே விரும்புகின்றனர்.
முதிர்ந்த ஸ்மார்ட்போன் பயனர்களை பெறுவதற்கு வலுவான போட்டி உள்ளது. மேலும் இதில், நாம் அசல் உபகரண உற்பத்தியாளர்களை பார்க்கிறோம். (OEM) இவர்கள் இந்த இரண்டு முக்கிய விலை பிரிவில் வலுவான கருத்தை முன்வைப்பதையும் காண்கிறோம் என துணை இயக்குநர் தருண் பதாக் கூறியுள்ளார்.

பெரும்பாலானோர் அதிகம் விரும்பும் முதல் பிரண்டாக ஜியோமியும், அதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் சாம்சங்கும் இருந்து வருகின்றன.
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஒப்போ, விவோ, ஆப்பிள் மற்றும் ஹானர் உள்ளிட்ட பிராண்டுகளை ஒப்பிடுகையில் ஒன் பிளஸ் முன்னோக்கி உள்ளது. இதைதொடர்ந்தே மற்ற பிராண்டுகள் விரும்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here