ரூ.10 கோடி பழைய நோட்டுக்களை மாற்றும் விவகாரம் – ஐ.ஏ.எஸ். அதிகாரியின் டார்ச்சரால் உறவினர் தற்கொலை

0
279

உத்திர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ரூ. 10 கோடி மதிப்புள்ள மதிப்பு நீக்கப்பட்ட தாள்களை பரிமாற்ற நிர்பந்தித்தாகக் கூறி முன்னாள் சர்க்கரை ஆலை மேலாளர் ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதேவ் கிராமத்தில், ஆதர்ஷ் மண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறினார் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஷலோக் குமார்.

51 வயதான விஜய் சிங் எழுதிவைத்த தற்கொலை குறிப்பில் அவரது மைத்துனனும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினோத் குமார் பவார் மதிப்பு நீக்கப்பட்ட தாள்களை பரிமாற்றக் கூறி தன்னை நிர்பந்தித்ததாக எழுதியுள்ளதாக ஷலோக் குமார் தெரிவித்தார்.

ஏற்கனவே ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதிப்பு நீக்கப்பட்ட தாள்களை குற்றம்சாட்டப்பட்டவருக்கு பரிமாற்றிக் கொடுத்ததாக தற்கொலை குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாகவும், சிங்குடைய தாயாருக்கு சொந்தமான நிலத்தையும் பவார் வற்புறுத்தி அபகரித்ததாகவும் கூறினார்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
காசிபாதில் வசிக்கும் பவார், முசாஃபர்நகரின் கூடுதல் மாவட்ட நடுவராகவும், பிஜ்னோர் மாவட்ட நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here