இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (இன்று) சரிவுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 509.54 புள்ளிகள் சரிந்து 33,176.00 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 165.00 புள்ளிகள் சரிந்து 10,195.15 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது. ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, ஃபார்மா உள்ளிட்ட அனைத்துத்துறையைச் சார்ந்த குறியீட்டெண்களும் சரிவைக் கண்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 186415.73 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.95ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்