இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.30) உயர்வுடன் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 190.66 புள்ளிகள் உயர்ந்து 35,160.36 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 47.05 புள்ளிகள் உயர்ந்து 10,739.35 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஆக்சிஸ் வங்கி 3.84 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. முந்தைய வர்த்தக நாளில் (ஏப்.27) இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 539.20 ரூபாயாக இருந்தது. இன்றைய (ஏப்.30) வர்த்தகத்தின்போது, அதன் விலையில் 20.70 ரூபாய் சரிந்து 518.50 ரூபாயாகவுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.49ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை: வேதாந்தா குழுமம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்