இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.24) உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்165.87 புள்ளிகள் உயர்ந்து 34,616.64 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி29.65 புள்ளிகள் உயர்ந்து 10,614.35 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது.

நிஃப்டி பட்டியலிலுள்ள ரிலையன்ஸ்; கெயில்; பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வைக் கண்டன. அதேபோன்று ஹிண்டால்கோ; இன்ஃபோசிஸ்; விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.30ஆக உள்ளது.

Reliance Industries Ltd

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.23 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான திங்கட்கிழமையன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 970.05 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 34.05 ரூபாய் உயர்ந்து 970.05 ரூபாயாக உள்ளது.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்