இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (ஏப்.20) சரிவுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்11.71 புள்ளிகள் சரிந்து 34,415.58 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 1.25 புள்ளிகள் சரிந்து 10,564.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.05ஆக உள்ளது.

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் பங்குகள் 6.98 சதவிகிதம் உயர்வைக் கண்டன. நேற்றைய வர்த்தகத்தின்போது (ஏப்.19), டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 3,191.15 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 222.85 ரூபாய் உயர்ந்து 3,414.00 ரூபாயாகவுள்ளது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், அதன் நான்காவது காலாண்டில் 6,900 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியுள்ளது. இதனையடுத்து இந்திய பங்குச் சந்தைகளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 6.98 சதவிகிதம் விலை உயர்வைக் கண்டுள்ளன. மேலும் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 3,422.35 ரூபாய் வரை வர்த்தகமாகி புதிய உச்சத்தைத் தொட்டன.

Tata Consultancy Services

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.3,422.35
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.2,252.80

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்