இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.16) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்47.57 புள்ளிகள் சரிந்து 34,145.08 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 4.30 புள்ளிகள் சரிந்து 10,476.30 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள சிப்லா, என்.டி.பி.சி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

infosys

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.40ஆக உள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.31 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான வெள்ளிகிழமையன்று (ஏப்.13) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 1,171.45 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 38.80 ரூபாய் சரிந்து 1,132.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

INFOSYS

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.1221.05
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.860

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here