இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்88.06 புள்ளிகள் சரிந்து 32,853.81 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி28.40 புள்ளிகள் சரிந்து 10,158.20 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.35 ஆக உள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited)

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 1.43 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 493.05 ரூபாயாக இருந்தது. இதில் தற்போது 7.05 ரூபாய் உயர்ந்து 500.10 ரூபாயாக உள்ளது.

ioc

அதே போன்று, ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் 1.09 சதவிகிதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் 0.94 சதவிகிதம் உயர்ந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்