இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்68.62 புள்ளிகள் உயர்ந்து 31,882.84 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி13.35 புள்ளிகள் உயர்ந்து 9,993.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

நிஃப்டி பட்டியலிலுள்ள டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று அதானி போர்ட்ஸ், பவர் கிர்ட், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.31ஆக உள்ளது.

adani1

முந்தைய வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 389.25 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 6.05 ரூபாய் சரிந்து 383.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

Adani Ports and Special Economic Zone Limited

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.421.50
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.245.15

இதையும் படியுங்கள்: ’ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நல்ல நடிகர்கள்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்