இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்28.92 புள்ளிகள் உயர்ந்து 31,862.91 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி12.90 புள்ளிகள் உயர்ந்து 9,997.70 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள கெயில், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.26ஆக உள்ளது.

Reliance Industries Ltd

reliance

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.14 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான புதன்கிழமையன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 840.15 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 9.60 ரூபாய் உயர்ந்து 849.75 ரூபாயாக உள்ளது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.872.50
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.465.00

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்