இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்131.36 புள்ளிகள் உயர்ந்து 32,055.77 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி39.20 புள்ளிகள் உயர்ந்து 10,056.15 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

market

நிஃப்டி பட்டியலிலுள்ள கெயில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று கோல் இந்தியா, மாருதி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.26ஆக உள்ளது.

gail1

கெயில் நிறுவன பங்குகள் 1.57 சதவிகிதம் உயர்வுடன் காணப்படுகிறது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று 444.60 ரூபாயாக இருந்த பங்கு ஒன்றின் விலையில், தற்போது 7.00 ரூபாய் உயர்ந்து 451.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதன் பங்கொன்றின் விலை 457.45 ரூபாயைத் தொட்டது. இது இந்த வருட வர்த்தகத்தின் அதிபட்ச விலையாகும்.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.457.45
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.300.76

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்