ரூ.மதிப்பு: 65.14; சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிவு; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு

0
271

இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்76.52 புள்ளிகள் சரிந்து 34,107.52 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 1.80 புள்ளிகள் சரிந்து 10,491.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள பஜாஜ் ஆட்டோ, அம்புஜா சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

infosys

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.14ஆக உள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.06 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான புதன்கிழமையன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 1,172.60 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 12.45 ரூபாய் சரிந்து 1,160.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

INFOSYS

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.1221.05
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.860

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்