இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்39.54 புள்ளிகள் சரிந்து 33,211.39 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி24.00 புள்ளிகள் சரிந்து 10,284.95 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள கெயில், ஐடிசி, எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.04 ஆக உள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited)

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 1.74 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான வியாழக்கிழமை இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 522.15 ரூபாயாக இருந்தது. இதில் தற்போது 9.10 ரூபாய் சரிந்து 513.05 ரூபாயாக உள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்