இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (இன்று) காலை முதல், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்44.28 புள்ளிகள் உயர்ந்து 33,191.41 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி2.25 புள்ளிகள் சரிந்து 10,341.55 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி பட்டியலிலுள்ள சிப்லா, என்.டி.பி.சி, டாடா மோட்டாரஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று பாரதி ஏஎடெல், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.01ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்