இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (மார்ச்.6) சரிவுடன் நிறைடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 429.58 புள்ளிகள் சரிந்து 33,317.20 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 109.60 புள்ளிகள் சரிந்து 10,249.25 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

நிஃப்டி பட்டியலிலுள்ள பிபிசிஎல், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாகின. அதேபோன்று சன்ஃபார்மா, ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.93ஆக உள்ளது.

எஸ்.பி.ஐ பங்குகள் 3.09 சதவிகிதம் சரிவைக் கண்டன. முன்னதாக திங்கட்கிழமையன்று 263.85 ரூபாயாக இருந்த பங்கு ஒன்றின் விலையில், தற்போது 8.15 ரூபாய் சரிந்து 255.35 ரூபாயாக உள்ளது.


* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.351.30

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.241.15

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்