இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (மார்ச்.7) சரிவுடன் நிறைடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 284.11 புள்ளிகள் சரிந்து 33,033.09 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 95.05 புள்ளிகள் சரிந்து 10,154.20 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

நிஃப்டி பட்டியலிலுள்ள ஐடிசி, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாகின. அதேபோன்று அதானிபோர்ட்ஸ், ஐசிஐசிஐ, பாரதி ஏர்டெல், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.90ஆக உள்ளது. கடந்த இரு தினங்களாக வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை இந்திய சந்தையின் மதிப்பு 1,45,75,054.23 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த இரு தினங்களில் ஏற்பட்ட சரிவின் காரணமாக செவ்வாய்க்கிழமை (நேற்று) 1,44,20,605.74 கோடி ரூபாயாகவும், புதன்கிழமை (இன்று) 1,42,36,320.85 கோடி ரூபாயாகவும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் 338733.38 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்