இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) சரிவுடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 21.04 புள்ளிகள் சரிந்து 33,835.74 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 15.95 புள்ளிகள் சரிந்து 10,410.90 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவுபெற்றது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.87ஆக உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் அதன் விலையில் 3.25 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளன. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 407.85 ரூபாயாக இருந்தது. இதில் தற்போது 13.25 ரூபாய் சரிந்து 394.60 ரூபாயாக உள்ளது. அதே போன்று, ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் அதன் விலையில் 2.02 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளன.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here