இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 221.40 புள்ளிகள் உயர்ந்து 34,363.55 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 65.45 புள்ளிகள் உயர்ந்து 10,556.50 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.67ஆக உள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்களது முதலீட்டிலிருந்து 9,899 கோடி ரூபாய் வரை திரும்பப் பெற்றுள்ளனர். உலக பங்குச் சந்தைகளில் காணப்படும் மந்தநிலை மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு உள்ளிட்டவை இவற்றிற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்