இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்26.68 புள்ளிகள் சரிந்து 32,806.26 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி7.85 புள்ளிகள் சரிந்து 10,113.95 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.50ஆக உள்ளது.

விப்ரோ நிறுவன பங்குகள் சரிவு

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் பங்குகள் 1.87 சதவிகிதம் சரிந்து காணப்படுகின்றன. முந்தைய வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று, விப்ரோ நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 289.40 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை 284.00 ரூபாயாக உள்ளது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.308.75
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.222.68

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்