இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 93.25 புள்ளிகள் உயர்ந்து 31,808.89 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 22.80 புள்ளிகள் உயர்ந்து 9,793.85 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.48ஆக உள்ளது.

INFOSYS

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.63 சதவிகிதம் உயர்ந்து
காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான திங்கட்கிழமையன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 957.05 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 25.15 ரூபாய் உயர்ந்து 982.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.1,196.05
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.901.00

bharti airtel

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 1.45 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய நாளான திங்கட்கிழமையன்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 405.70 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 5.90 ரூபாய் சரிந்து 399.80 ரூபாயாக உள்ளது.

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.410.15
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.283.05

இதையும் படியுங்கள் : கிராமத்தைச் சீண்டி பார்க்காதீர்கள்

பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்