இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) சிறிது ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 39.11 புள்ளிகள் உயர்ந்து 31,142.60 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 3.65 புள்ளிகள் உயர்ந்து 9,610.55 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.34ஆக உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள்1.65 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமையன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 1,314.35 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 21.65 ரூபாய் உயர்ந்து 1,336.00 ரூபாயாக உள்ளது.

இதையும் படியுங்கள் : NDTV இல் CBI சோதனை: சுதந்திரமான ஊடகங்கள் சாத்தியமா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்