இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல் சிறிது சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 3.51 புள்ளிகள் சரிந்து 31,152.40 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 9.90 புள்ளிகள் சரிந்து 9,608.25 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.29ஆக உள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் பங்குகள் 0.84 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான புதன்கிழமையன்று, விப்ரோ நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 256.10 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை 258.25 ரூபாயாக உள்ளது.

இதையும் படியுங்கள் : “ஜெயலலிதாவின் உறுதியான வழிகளிலிருந்து விலகி விட்டது அதிமுக”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்