தொடர் சரிவுகளுக்குப் பின்னர், இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 153.36 புள்ளிகள் உயர்ந்து 34,349.30 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 59.60 புள்ளிகள் உயர்ந்து 10,557.85 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.17ஆக உள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகள் 4.62 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 377.60 ரூபாயாக இருந்தது. இதில் தற்போது 17.45 ரூபாய் உயர்ந்து 395.05 ரூபாயாக உள்ளது.

அதே போன்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் 1.33 சதவிகிதம் உயர்ந்தும், பாரத் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள் 1.84 சதவிகிதம் உயர்ந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

விலை நிலவரம் (இன்று): பெட்ரோல் விலை லிட்டருக்கு 76.12 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 67.73 ரூபாயாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்