இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 49.75 புள்ளிகள் உயர்ந்து 32,208.41 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 12.45 புள்ளிகள் உயர்ந்து 10,105.50 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.00ஆக உள்ளது.

டாடா பவர் நிறுவனத்தின் பங்குகள் 6.30 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தையான நாளான செவ்வாய்கிழமையன்று டாடா பவர் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 81.00 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 5.10 ரூபாய் உயர்ந்து 86.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: ”ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியா வெளியேற்ற கூடாது”: ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்