இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) சற்று ஏற்று ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்32.04 புள்ளிகள் உயர்ந்து 32,305.71 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 15.65 புள்ளிகள் உயர்ந்து 10,073.05 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.74ஆக உள்ளது.

ஹிண்டால்கோ நிறுவனம்

hindalcom

ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்தின் பங்குகள் 6.35 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான திங்கட்கிழமையன்று இந்நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 227.65 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 14.45 ரூபாய் உயர்ந்து 242.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.


* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.138.50
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.244.90

இதையும் படியுங்கள்: “கிணறுகள்தான் நம்மைக் காப்பாற்றும்”: சேகர் ராகவன்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்