இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 43.38 புள்ளிகள் உயர்ந்து 34,886.89 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 7.65 புள்ளிகள் உயர்ந்து 10,749.20 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.71ஆக உள்ளது.

நிஃப்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 50 நிறுவனங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்திலும் ஐடி நிறுவனங்களே உள்ளன. ஹெச்.சி.எல்.டெக் 2.80 சதவிகிதம் உயர்ந்தும், டெக் மகேந்திரா 2.28 சதவிகிதம் உயர்ந்தும், விப்ரோ 2.32 சதவிகிதம் உயர்ந்தும், டிசிஎஸ் 1.27 சதவிகிதம் உயர்ந்தும், இன்ஃபோசிஸ் 1.00 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்