இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (இன்று) காலை முதல், சிறிய ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 3.80 புள்ளிகள் உயர்ந்து 34,436.87 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 7.30 புள்ளிகள் சரிந்து 10,624.90 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.69ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.94 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான புதன்கிழமையன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 1,052.25 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 9.85 ரூபாய் உயர்ந்து 1,062.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 1,067.80 ரூபாய் வரை வர்த்தகமாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

INFOSYS

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.1,067.80
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.860.00

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்