இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்104.10 புள்ளிகள் உயர்ந்து 32,494.06 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 45.85 புள்ளிகள் உயர்ந்து 10,192.40 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

நிஃப்டி பட்டியலிலுள்ள பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.09ஆக உள்ளது.

முந்தைய வர்த்தக நாளான்று அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 401.40 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 8.05 ரூபாய் உயர்ந்து 409.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

adani

Adani Ports and Special Economic Zone Limited

* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.421.50
* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.245.15

இதையும் படியுங்கள்: “நடராஜனின் உறுப்பு மாற்றத்தை விமர்சிப்பது சரியல்ல”: தமிழிசையிடமிருந்து முரண்படும் எஸ்.வி.சேகர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்