ரூபாய் நோட்டுகளை அச்சிட்டும் திட்டம் ஏதுமில்லை : ஆா்பிஐ கவா்னா்

RBI Governor Shaktikanta Das on Thursday said the central bank has no plans to monetise the rising fiscal deficit. This is the third consecutive year that the government has revised its fiscal deficit target.

0
292

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட மாட்டோம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கவா்னா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான இலக்கை மாற்றி அமைத்துள்ளது. முந்தைய மத்திய பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் அரசின் வருவாய்க்கும் -செலவுக்கும் இடையேயான நிதிப் பற்றாக்குறையை 3.3. சதவீதத்துக்குள் வைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது, 3.8 சதவீதமாக அதிகரித்து விட்டது.

இந்நிலையில், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் நிதியாண்டில் பற்றாக்குறை விகிதத்தை 3.5 சதவீதத்துக்குள் வைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் ஆா்பிஐ நிதிக்கொள்கை குழு கூட்டத்துக்குப் பிறகு நேற்று(வியாழக்கிழமை) இது தொடா்பாகசெய்தியாளா்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், ‘நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடும் திட்டம் ஏதுமில்லை’ என்றுகூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here