ரிலையன்ஸ் பங்குகளை வாங்க அமேசான் பேச்சுவார்த்தை

0
256

 வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒன்றாக இணைந்து தொழில் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸின் ரீடெய்ல் சந்தையின் சில பங்குகளை அமேசான் வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. 

உலக அளவில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் வால்மார்ட், சென்ற ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் 16 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. இந்நிலையில் அமேசான் – ரிலையன்ஸ் கூட்டணி அமைந்தால், அந்நிறுவனத்துக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அரசு, இணைய வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அதே நேரத்தில் ரிலையன்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு அரசின் புதிய விதிமுறைகள் சாதகமாக அமைந்தன. 

இப்படிப்பட்ட சூழலில்தான் ரிலையன்ஸுடன் கூட்டு சேர அமேசான், விருப்பம் தெரிவித்து வருகிறதாம். கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமேசான், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தெரிந்த வட்டாரம் நமக்கு சொல்கிறது. 

இந்த பரபரப்பு தகவல் குறித்து அமேசான் நிறுவனம் கருத்து கூற மறுத்துவிட்டது. அதே நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம், “முறையான நேரத்தில் தகவல் தெரிவிப்போம்” என்று  கூறியுள்ளது. 

http://ndtv