ஆண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியிருக்கும் ரிலையன்ஸ் கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்குவதாக கூறியிருந்தது.

அதன்படி டெய்ரி மில்க் சாக்லேட் கவரை புகைப்படம் எடுத்து மைஜியோ செயலி மூலம் அப்லோடு செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Jio-Offer-Free-1GB-4G-Data

அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2 ஜிபி டேட்டாவினை தினமும் வழங்க ஜியோ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜியோ வாடிக்கையாளர்கள் செலபிரேஷன் பேக் பயன்படுத்த, கூடுதல் டேட்டா மற்றும் அதன் வேலிடிட்டி சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள மைஜியோ ஆப் – பில் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here